45. எம்மனோரில் செம்மலும் உடைத்தே!
45. எம்மனோரில் செம்மலும் உடைத்தே! பாடியவர்: உலோச்சனார், ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை இப்பாடலை உலோச்சனார் பாடியதாகச் சில உரையாசிரியர்கள் கருதுகின்றனர். சில பதிப்புகளில் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திணை: நெய்தல் துறை: குறை வேண்டிய தலைவனைத் தோழி சேட்படுத்தது துறை விளக்கம்: த லைவியைச் சந்திக்க உதவி கேட்டு வரும் தலைவனை உடனடியாகச் சந்திக்க விடாமல் தோழி தடுத்துத் தள்ளிப்போடுகிறாள். பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைக் கூடி மகிழ விரும்பி (குறை நயந்து) வருகின்றான். "நாங்கள் மீன் பிடிக்கும் எளிய குடிசை வாழ் மக்கள்; நீயோ தேர் ஊர்ந்து வரும் செல்வந்தன். நம் இருவருக்கும் இடையே குலத்தாலும் வளத்தாலும் பெரிய வேறுபாடு உள்ளது" என்று கூறித் தோழி தலைவனைத் தூர விலகி நிற்குமாறு கூறுகிறாள். இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு மீன் எறி பரதவர் மகளே நீயே நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே ...