31. பல நினைந்து யானும் இனையேன்!
31. பல நினைந்து யானும் இனையேன்! பாடியவர்: நக்கீரனார் இவர் மதுரைக் கணக்காயனாரின் மகன் என்பதனால் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று அழைக்கப்பட்டார். இவரும் மதுரை நக்கீரர் என்பவரும் ஒருவரே என்பது ஒரு சாரர் கருத்து. வேறு சிலர் , மதுரை நக்கீரர் வேறு இவர் வேறு என்பர். இவர் கடைச்சங்கத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தெளிந்த அறிவும் சிறந்த புலமையும் உடையவர். இவர் புறநானூற்றில் மூன்று செய்யுட்களையும் ( 56, 189, 395), அகநானூற்றில் 17 செய்யுட்களையும் , நற்றிணையில் 7 செய்யுட்களையும் , குறுந்தொகையில் 8 செய்யுட்களையும் இயற்றியவர். மற்றும் பத்துப்பாட்டில் முதலாவதாகிய திருமுருகாற்றுப்படையையும் ஏழாவதாகிய நெடுநல்வாடையையும் இயற்றியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இறையனார் அகப்பொருளுக்கு இவர் எழுதிய உரை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. திணை: நெய்தல் துறை: தலைவன் சிறைப்புறத்தானாக தலைவி வன்புறை எதிரழிந்தது. துறை விளக்கம்: தலைவன் வீட்டின் வெளியே மறைந்து நிற்பதை அறிந்த தோழி, தல...