Posts

Showing posts with the label 44. மலைநாடன் மகளை இனிக் காண்பது அரிது

44. மலைநாடன் மகளை இனிக் காண்பது அரிது

  44. மலைநாடன் மகளை இனிக் காண்பது அரிது   பாடியவர்: பெருங்கௌசிகனார் இவர் நற்றிணையில் இரண்டு செய்யுட்கள் (44, 139) இயற்றியுள்ளார். இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனார் என்ற புலவர் பத்துப்பாட்டில் உள்ள மலைபடுகடாம் என்ற பாடலை இயற்றியுள்ளார். நற்றிணைப் பாடல்களை இயற்றிய பெருங்கௌசிகனாரும், மலைபடுகடாம் இயற்றிய இரணிய முட்டத்துப் பெருங்கௌசிகனாரும் ஒருவரே எனச் சிலர் கருதுகின்றனர். திணை: குறிஞ்சி துறை: இற்செறிப்பின் பிற்றை ஞான்று தலைமகன் குறியிடத்து வந்து சொல்லியது துறை விளக்கம்:   தலைவியின் களவுறவு தெரிந்ததால் அவளை வீட்டில் அடைத்து வைத்த பிறகு, மறுநாள் வழக்கமான சந்திப்பு இடத்திற்கு வந்த தலைவன் அவளைக் காணாமல் தன் நெஞ்சிடம் பேசுகிறான். பாடலின் பின்னணி: களவொழுக்கத்தில் தலைவியோடு காதல் கொண்ட தலைவன், அவளை வழக்கமாகத் தினைப்புனத்தில் சந்தித்தான். களவொழுக்கம் வெளிப்பட்டதால் தலைவி இற்செறிக்கப்பட்டிருந்தாள் . தினை விளைந்து அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்ததால், தினைப்புனத்தில் அவளைச் சந்திக்கும் வழக்கமான வாய்ப்பு இனி இல்லாமல் போகிறது.   இற்செறிப்புக்கு மறுநாள் தலைவன்...