Posts

Showing posts with the label 30. கண்டனென் மகிழ்ந!

30. கண்டனென் மகிழ்ந!

  30. கண்டனென் மகிழ்ந!   பாடியவர்: கொற்றனார் இவர் செல்லூர்க் கொற்றனார் என்றும், செல்லூர் கிழார் மகனார் பெரும் பூதங் கொற்றனார் என்றும் கீரங் கொற்றனார் என்றும் அழைக்கப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர். இவர் இயற்றியதாக நற்றிணையில் ஒரு பாடலும், குறுந்தொகையில் ஒரு பாடலும் அகநானூற்றில் ஒரு பாடலும் உள்ளன.   திணை: மருதம்   துறை: பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் யாரையும் அறியேன் என்றார்க்குத் தோழி சொல்லியது   துறை விளக்கம்: பரத்தையருடன் தொடர்புகொண்டிருந்த தலைவன் மீண்டும் தன் வீட்டிற்கு வருகிறான். அவன் பரத்தையரோடு தொடர்புகொண்டிருந்ததால் தலைவி ஊடி இருப்பதாகத் தோழி கூறுகிறாள். அவன், 'என் மனைவியைத் தவிர வேறு எவரையும் அறியேன்' என்று பொய் சொல்கிறான். அவனுக்குத் தோழி சொல்வதாக இச்செய்யுள் அமைந்துள்ளது.   பாடலின் பின்னணி: பரத்தையரோடு சிலகாலம் இருந்த பிறகு, தன் இல்லத்திற்குத் திரும்பும் தலைவனைத் தோழி எதிர்கொள்கிறாள். அவனது வருகையை ஏற்க மறுத்து, அவனிடம் தலைவியின்   ஊடலைத் தோழி வெளிப்படுத்துவதை இப்பாடல் சித்திரிக்கிறது. இப்பாடலில் தோழி தலைவனை நோக...