Posts

Showing posts with the label 8. இவள் தந்தை வாழ்க! திறம் பெறுக இவள் தாயே!

8. இவள் தந்தை வாழ்க! திறம் பெறுக இவள் தாயே!

  8. இவள் தந்தை வாழ்க! திறம் பெறுக இவள் தாயே!   பாடியவர்: பெயர் கிடைக்கவில்லை [1]   திணை: குறிஞ்சி   துறை: இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன் சொல்லியது   துறை விளக்கம்: தற்செயலாக நடைபெற்ற சந்திப்பின் இறுதியில், தலைவி தன் தோழியர் கூட்டத்துடன் சேர்ந்து நிற்பதைக் கண்ட தலைமகன், தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டது. பாடலின் பின்னணி: தலைவன் தன் தோழனுடன் சென்றுகொண்டிருந்தபோது, கடற்கரைச் சோலையில் எழில்மிக்க தலைவியைக் கண்டு காதல் கொள்கிறான். அவளது மயக்கும் அழகிலும், மானைப்போன்ற மருண்ட பார்வையிலும் தன்னையே மறக்கும் தலைவன், தன் உள்ளத்தில் மலர்ந்த அரிய வேட்கையினால் தவிக்கின்றான். அவளது எழிலும், அவள் அணிந்துள்ள நறுமண மலர்த் தழையாடையும் அவனைப் பெரிதும் கவர்கின்றன. தமக்குத் துயரத்தைத் தரும் பேரழகைக் கொண்ட இந்த நங்கை யாருடைய மகளோ என்று வியக்கும் தலைவன், "இவளைப் பெற்ற தந்தை வாழ்க!" என மனதார வாழ்த்துகிறான். தொடர்ந்து, ”வயலில் நெல் அறுப்போர் அறுத்துப் போட்டும், நெய்தல் மலர்கள் நெற்போர்களில் பூக்கும், திண்ணிய தேரையுடைய பொறையனின் தொண்டி நக...