100. உள்ளுதொறும் நகுவேன், தோழி!
100. உள்ளுதொறும் நகுவேன், தோழி! பாடியவர்: பரணர் சங்க காலப் புலவர்களிலேயே மிகவும் சிறந்த புலவர்களில் ஒருவர் பரணர் . பரணரால் பாடப்படுவது பாராட்டுதற்குரியது என்ற கருத்தில் “ பரணன் பாடினன் ’ என்று ஒளவையார் குறிப்பிடுகிறார் ( புறநானூறு - 99). பரணர் , புறநானூற்றில் 13 செய்யுட்களும் , அகநானூற்றில் 34 செய்யுட்களும் , நற்றிணையில் 12 செய்யுட்களும் , குறுந்தொகையில் 16 செய்யுட்களும் , பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார் . இவரால் பாடப்பட்டோர் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி , சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் , சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி , வையாவிக் கோப்பெரும் பேகன் , சேரமான் கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் ஆகியோராவர் . இவருடைய பாடல்கள் வரலாற்றுச் செய்திகள் நிறைந்தவை . இவர் கபிலரின் நண்பர் . மருதத் திணைக்குரிய பாடல்கள் இயற்றுவதில் வல்லவர் . இவர் பதிற்றுப்பத்தில் கடல் பிறக்கோட்டிய வேல்குழு குட்டுவனைப் பாடியதற்கு , உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரனையும் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது . திணை: ...