21. வலவ, உதுக் காண்!
21. வலவ, உதுக் காண்! பாடியவர்: மருதன் இளநாகனார் இவரை மதுரை மருதன் இளநாகனார் என்றும் கூறுவர். இவர் பாடிய பாட்டுக்களை ஆராய்ந்து பார்த்தால் இவர் திருச்செந்தூர் அருகில் பிறந்தவராக இருக்கலாம் என்று ஔவை சு. துரைசாமிப்பிள்ளை குறிப்பிடுகிறார். இவர் மருதத்திணை சார்ந்த பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இவர் தந்தை பெயர் மருதன். ஆகவே , தந்தையின் பெயர் காரணமாகவும் மருதத்திணைக்குரிய பாடல்களை இயற்றியதாலும் இவர் மருதன் இளநாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் இளநாகன். இவர் புறநானூற்றில் ஐந்து செய்யுட்களும் , அகநானூற்றில் 23 செய்யுட்களும் , கலித்தொகையில் மருதக்கலி எனப்படும் 35 செய்யுட்களும் , குறுந்தொகையில் 4 செய்யுட்களும் , நற்றிணையில் 12 செய்யுட்களும் இயற்றியுள்ளார். திணை: முல்லை துறை: வினை முற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச் சொல்லியது துறை விளக்கம்: தன் கடமையை (போர் அல்லது தொழில்) வெற்றிகரமாக முடித்துவிட்டு வீடு திரும்பும் தலைவன், தன் தேரோட்டியிடம் (பாகனிடம்) சொல்வது. பாடலி...