Posts

Showing posts with the label 18. பல் படர் அகல வருவர்

18. பல் படர் அகல வருவர், தோழி!

  18. பல் படர் அகல வருவர், தோழி!   பாடியவர்: பொய்கையார் இவர் புறநானூற்றுப் பாடல் 48-இல், ‘கள்நாறும்மே கானலந் தொண்டி; அஃது எம் ஊரே’ என்று கூறியிருப்பதிலிருந்து, இவருடைய ஊர் தொண்டி என்று கருதப்படுகிறது. புறநானூற்றில் இவர் பாடிய இரண்டு பாடல்களும் (48, 49) சேரமான் கோக்கோதை மார்பனைப் புகழ்ந்து பாடப்பட்டவையாகும். இவர் நற்றிணையில் 18-ஆம் செய்யுளையும் இயற்றியுள்ளார். செங்கணான் என்ற சோழ அரசனுக்கும், சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் கழுமலம் என்ற ஊரில் போர் நிகழ்ந்தது. அப்போரில் சோழன் செங்கணான் இரும்பொறையை வென்று, அவனைக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் காவலில் வைத்ததாக வரலாறு கூறுகிறது. சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறையில் இருந்தபொழுது, பொய்கையார் சோழ மன்னனைக் 'களவழி நாற்பது' என்ற நூலில் சிறப்பித்துப் பாடி, அதற்குப் பரிசாகச் சேரன் கணைக்கால் இரும்பொறையைச் சிறையிலிருந்து மீட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கு மாறாக, பொய்கையார் மீட்பதற்கு முன்னரே சேரமான் கணைக்கால் இரும்பொறை இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.   திணை: பாலை   துறை: பிரிவிடை ஆற்றாளாகிய தலைவியைத் தோழி வற்...