7. கார்காலம் உணர்த்தும் தலைவன் வருகை
7. கார்காலம் உணர்த்தும் தலைவன் வருகை பாடியவர்: நல்வெள்ளியார் நல்வெள்ளியார் என்றும் நல்லொளியார் என்றும் அழைக்கப்பட்ட இவர் மதுரையைச் சேர்ந்த பெண்பாற் புலவர். இவர் பாடியதாக நற்றிணையில் இரண்டு பாடல்கள் (7,47), குறுந்தொகையில் ஒரு பாடல் (365), அகநானூற்றில் ஒரு பாடல் (32) ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன. திணை: பாலை துறை: பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டி இடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய ஆற்றாளாய தலைவிக்குத் தோழி சொல்லியது துறை விளக்கம்: காதல் உறவு ஏற்பட்ட பிறகு, திருமணம் செய்துகொள்ளாமல், தலைவன் பொருள் தேடுவதற்காக நீண்ட காலம் பிரிந்து செல்ல, அந்தப் பிரிவைத் தாங்க முடியாத தலைவிக்குத் தோழி கூறியது. பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் தேடச் சென்ற சூழலில், அவன் திரும்பி வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் தொடங்குகிறது. இயற்கை கொந்தளிக்கும் இச்சூழலில், தலைவனின் பிரிவைத் தாங்க முடியாமல் வருந்தும் தலை...