34. கடவுள் ஆயினும் ஆக மடவை!
34. கடவுள் ஆயினும் ஆக மடவை! பாடியவர்: பிரமசாரி இவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. இவர் பெயர் பிரமன் காரி என்றும், அந்தப் பெயர் பிரமசாரி என்று தவறாக நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக, ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார். திணை: குறிஞ்சி துறை: தோழி தெய்வத்திற்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது துறை விளக்கம்: தோழி தெய்வத்திடம் பேசுவதுபோலப் பேசி வெறியாட்டத்தைத் தடுத்தது. பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைச் சந்திப்பதற்குக் காலதாமதமாகிறது. அதனால் தலைவி பிரிவுத் துயரால் மெலிவடைகிறாள். இதைக் கண்ட தலைவியின் தாயும் செவிலித்தாயும், "தலைவிக்கு ஏதோ தெய்வக் குற்றம் (முருகனின் அணங்கு) பிடித்துள்ளதோ" என அஞ்சி, வேலனை அழைத்து வெறியாட்டம் நடத்த ஏற்பாடு செய்கின்றனர். தோழி, அங்கு வந்துள்ள வேலனையும், தெய்வமாகிய முருகனையும் பார்த்து, "தலைவனின் மார்பைத் தழுவியதால் வந்த நோய் இதுவென அறிந்தும் வேலன் அழைத்தான் என்பதற்காக இங்கு வந்து நின்றாயே, முருகா, நீ கடவுளாக...