Posts

Showing posts with the label 49. அறியின் எவனோ

49. அறியின் எவனோ, தோழி?

  49. அறியின் எவனோ, தோழி?   பாடியவர்: நெய்தல் தத்தனார் தத்தன் என்பது இவர் இயற்பெயர். கொடியூர்கிழாரின் மகனார். நெய்தல் திணையைச் சிறப்பாகப் பாடியதனால் ‘நெய்தல் தத்தனார்’ என அழைக்கப்பட்டார். நற்றிணை 49, 130 ஆகிய இரண்டு பாடல்களும் அகநானூறு 243-ஆம் பாடலும் இவரால் பாடப்பட்டவை .   திணை: நெய்தல் துறை: தோழி தலைமகளை இரவுக்குறி நயப்பித்தது சிறைப்புறமாகத் தோழி ஆற்றாமை வியந்ததூஉம் ஆம் துறை விளக்கம்: தலைவன் சிறைப்புறமாக இருந்து தோழியின் பேச்சைக் கேட்கிறான்; தலைவியின் ஆற்றாமையை வியப்பதுபோலத் தோழி கூறி, தலைவன் விரைந்து வந்து வரைந்து கொள்ளுமாறு தூண்டுகிறாள்.   பாடலின் பின்னணி: கடற்கரைச் சிற்றூரில் பகல் முழுவதும் பரதவர்கள் கடலில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். மாலைப் பொழுது நெருங்கியதும், வலையில் சிக்கிய இறால்களையும் பிடித்த மீன்களையும் எடுத்துக்கொண்டு அவர்கள் கரைக்குத் திரும்பினர். கடற்பறவைகளும் இரை தேடுவதை நிறுத்தி அமைதியடைந்தன. வெண்மையான மணல் மேடுகளைக் கடந்து இருள் மெல்லப் பரவத் தொடங்கியது. புன்னை மரத்தின் மணமும் தாழை மலரின் நறுமணமும் காற்றில் கலந்தன. அந்த...