Posts

Showing posts with the label நற்றிணை - முன்னுர

நற்றிணை - முன்னுரை

  நற்றிணை   நற்றிணை என்பது தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்னும் சங்க இலக்கிய வகைப்பாட்டினுள் காணப்படும் ஒரு நூலாகும். இந்நூல் பல புலவர்களால் தனித்தனிப் பாடல்களாகப் பாடப்பட்டுப் பின்னர் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்கள் இவை எனக் குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலிடம் பெற்றுத் திகழ்வது நற்றிணையாகும். எட்டுத்தொகை நூல்களில் “நல்” என்னும் அடைமொழியைப் பெற்ற நூல் இதுவேயாகும். இதனால் இது “நல் + திணை” எனப் பொருள்படும் நற்றிணை என அழைக்கப்படுகிறது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர். பிற்காலத்தில் சிறந்து விளங்கிய “தூது ” என்னும் சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகவும் நற்றிணைப் பாடல்கள் அமைந்துள்ளன. இந்நூலில் திருமாலை வாழ்த்தும் கடவுள் வாழ்த்துடன் 401 பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஒன்பது முதல் பன்னிரண்டு அடிகளைக் கொண்ட பாடல்களாக அமைந்துள்ளன. ஏழு அடிகளைக் கொண்ட பாடல்களும், பதின்மூன்று அடிகளைக் கொண்ட பாடல்களும் நற்றிணையில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலைத் தொகுத்தவர் யார் என்பது அறியப்படவில்லை. எனினும், இதனைத் தொகுப்பித்தவர் “பன்னா...