Posts

Showing posts with the label 11. மெய் சாயினை!

11. மெய் சாயினை!

  11. மெய் சாயினை! பாடியவர்: உலோச்சனார் இவர் சோழ நாட்டிலிருந்த கண்பவாயில் என்னும் ஊரைச் சார்ந்தவராகக் கருதப்படுகிறார். நெய்தல் திணைப் பாடல்களை இயற்றுவதில் வல்லவரான இவர், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி உறையூரிலிருந்து ஆட்சிபுரிந்தபோது அவனைப் பாடிப் பரிசில் பெற்றவர் (புறநானூறு – 377). இவர் புறநானூற்றில் மூன்று பாடல்கள் (258, 274, 377), நற்றிணையில் இருபது பாடல்கள் (11, 38, 63, 64, 74, 131, 149, 191, 203, 223, 249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 398), அகநானூற்றில் எட்டுப் பாடல்கள் (20, 100, 190, 200, 210, 300, 330, 400), குறுந்தொகையில் நான்கு பாடல்கள் (175, 177, 205, 248) ஆகியவற்றை இயற்றியுள்ளார்.   திணை: நெய்தல்   துறை: காப்பு மிகுதிக்கண் இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.   துறை விளக்கம்: பெற்றோரின் கடுமையான காவலால் உன்னைச் சந்திக்க முடியாமல், பிரிவைத் தாங்க முடியாமல் வருந்தும் தலைவியிடம், தலைவன் வீட்டின் வேலிக்கு வெளியே மறைந்து நின்று கேட்கும் வேளையில், தோழி அவனுக்குக் கேட்கும்படி கூறியது.   ...