Posts

Showing posts with the label 46. இன்பமும் இளமையும் எய்கணை நிழல்

46. இன்பமும் இளமையும் எய்கணை நிழல்

  46. இன்பமும் இளமையும் எய்கணை நிழல்   பாடியவர்: கோட்டம்பலவனார் , ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை இப்பாடலை கோட்டம்பலவனார் பாடியதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார். சில பதிப்புகளில் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   திணை: பாலை   துறை: பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி சொல்லியது துறை விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லப் போவதாகக் கூறியபோது, அந்தப் பிரிவால் தலைவி அடையும் துன்பத்தை எடுத்துக்கூறி, தலைவன் பிரிந்து செல்லாமல் இருக்குமாறு தோழி கூறியது.   பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்ல எண்ணுகிறான். தன் பிரிவைத் தலைவியிடம் நேரடியாகக் கூறினால் அவள் பெரிதும் வருந்துவாள் என்று கருதி, தோழியிடம் தன் எண்ணத்தைத் தெரிவிக்கிறான். அதைக் கேட்ட தோழி, தலைவனிடம் அறிவுறுத்துகிறாள். “உலக வாழ்க்கையில் இளமையும் காதல் இன்பமும் மிக விரைவாகக் கழிந்துவிடுகின்றன. அவ்வாறிருக்க, நிலையற்ற பொருளைத் தேடுவதற்காக நீ தலைவியைப் பிரிந்து, கொடிய பாலை வழியைக் கடந்து செல்வது முறையன்று. ஆகவே, என் தோழ...