Posts

Showing posts from August, 2026
  40. கள்வன் போல வந்தனன்   பாடியவர்: கோண்மா நெடுங்கோடனார் இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.   திணை: மருதம்   துறை: தலைமகட்குச் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது.   துறை விளக்கம்: தலைவியின் தோழியர் (அல்லது நலம் விரும்பிகள்) கேட்கும் படியாக, பரத்தை கூறியது.   பாடலின் பின்னணி: தலைவன் சில காலம் ஒரு பரத்தையோடு வாழ்ந்து, தனது மனைவியையும் இல்லற வாழ்க்கையையும் மறந்து இருந்தான். அந்த வேளையில் தலைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தன் தாத்தாவின் பெயரையே பெற்றிருக்கும் அந்த அருமை மகனைப் பார்க்கத் துடித்த தலைவன், யாருக்கும் தெரியாமல் ஒரு திருடனைப்போல நள்ளிரவில் ஒளிந்து மறைந்து தன் வீட்டுக்குச் சென்றான். தலைவன் தன்னைப் பிரிந்து சென்றதால், அவன் தன்னை விரும்பாமல் அவன் தன் மனைவியிடமே திரும்பிச் சென்றுவிட்டான் என்று மற்ற பரத்தையர் தன்னைப் பற்றி   ஏளனமாகப் பேசுவார்கள் என்று அவனோடு வாழ்ந்த பரத்தை அஞ்சினாள். “என்னை விரும்பாததால் தலைவன் என்னைவிட்டுப் பிரிந்து செல்லவில்லை. அவன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கி...

39. காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ!

  39. காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ!   பாடியவர்: மருதன் இளநாகனார் இவரை மதுரை மருதன் இளநாகனார் என்றும் கூறுவர். இவர் மருதத்திணைப் பாடல்களை இயற்றுவதில் வல்லவர். இவர் தந்தையின் பெயர் மருதன். ஆகவே, தந்தையின் பெயர் காரணமாகவும் மருதத்திணைக்குரிய பாடல்களை இயற்றியதாலும் இவர் மருதன் இளநாகனார் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் இளநாகன். இவர் புறநானூற்றில் ஐந்து செய்யுட்களும், அகநானூற்றில் 23 செய்யுட்களும், கலித்தொகையில் மருதக்கலி எனப்படும் 35 செய்யுட்களும், குறுந்தொகையில் 4 செய்யுட்களும், நற்றிணையில் 12 செய்யுட்களும் இயற்றியுள்ளார்.       திணை: குறிஞ்சி துறை: இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது. துறை விளக்கம்: தலைவனும் தலைவியும் முதன்முதலில் சந்தித்துக் கூடிய பின்னர் (இயற்கைப் புணர்ச்சி), மீண்டும் அதே இடத்தில் சந்திக்கின்றனர் (இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சி / இடந்தலைப்பாடு). அப்போது நாணத்தால் தலைகுனிந்து நிற்கும் தலைவியைப் பார்த்து, அவளது பேரழகையும் தன் காமத்தின் மிகுதியையும் புலப்படுத்தித் தலைவன் கூறிய...

38. புலம்பு ஆகின்றே!

  38. புலம்பு ஆகின்றே!   பாடியவர்: உலோச்சனார் இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 11-ன் உரையில் காணலாம். திணை: நெய்தல் துறை: தலைவி வன்புறை எதிர் அழிந்து சொல்லியது துறை விளக்கம்: தலைவனின் பிரிவால் வாடும் தலைவிக்குத் தோழி ஆறுதல் அளிக்க முயல்கிறாள். ஆனால், அந்த ஆறுதல் வார்த்தைகளைக் கேட்டும் தலைவியால் தன் ஆற்றாமையைக் கட்டுப்படுத்த முடியாமல், தன் சோகத்தையும் மனக்கலக்கத்தையும்   வெளிப்படுத்துகிறாள். பாடலின் பின்னணி: வலைநிறைய மீன்களோடுத் திரும்பிய படகுகளாலும், தவறாது பெய்த மழையாலும் கள்ளுண்டு மகிழும் பரதவர்களின் ஆரவாரத்தாலும் தலைவியின் காண்டவாயில் என்னும் ஊர் ஒரு பெருந்திருவிழாபோல் களிப்பில் திளைத்திருக்கிறது. தலைவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்ற வருத்தத்தில், மேனியெல்லாம் பசலை படரச் சோர்ந்து கிடக்கும் தலைவியை நோக்கி, "ஊரே இத்தனை மகிழ்ச்சியில் திளைக்கையில் நீ மட்டும் ஏன் இப்படித் தனிமையில் வருந்துகிறாய்?" என்று ஆறுதல் கூறி அவளது மனதைத் தேற்ற முயல்கிறாள் தோழி. அதற்குத் தலைவி, "தோழி! ஊரே விழாக்கோலம் பூண்டு ஆரவாரித்தாலும், அந்த மகிழ்ச்சி என் மனதைத் தொடவே இல்லை; என் ...

37. அகறிர் ஆயின் என் பரம் ஆகுவது அன்று!

37. அகறிர் ஆயின் என் பரம் ஆகுவது அன்று!   பாடியவர்: பேரிசாத்தனார் இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 25-ன் உரையில் காணலாம்.   திணை: பாலை   துறை: வரைவிடை வைத்துப் பிரியக் கருதும் தலைமகற்குத் தோழி சொல்லியது.   துறை விளக்கம்: திருமணம் செய்துகொள்வதற்கான பொருளைத் தேடிப் பெற, சில காலம் பிரிந்து செல்ல நினைக்கும் தலைவனிடம், அவனுடைய காதலியின் நிலையை விளக்கித்   தோழி கூறியது.   பாடலின் பின்னணி: பொருளீட்டுவதற்காகத் தலைவன் பிரிந்து செல்ல நினைப்பதை அறிந்த தலைவி, ஆண் மானைப் பிரிந்த பெண் மான்போலக் கலங்கி, நீரால் சூழப்பட்ட குவளை மலரைப்போல் தன் அழகிய கண்களிலிருந்து கண்ணீர் வடித்து வருந்துகிறாள்.   மரங்கள் வறண்டு, புல் தேடும் பசுவின் மணியோசை மட்டும் மெல்ல ஒலிக்கும் கொடிய காட்டு வழியாக இருந்தாலும், தலைவியையும் உடன் அழைத்துச் செல்வதே நல்லது என்றும், மேகங்கள் இடியுடன் முழங்கி மழை பொழியும் கார் கால மாலைப் பொழுது அருகில் வந்துவிட்ட இந்நேரத்தில் அவளைப் பிரிந்து சென்றால் அவள் அடையும் துயரத்தை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், அன்பில்லாதவனைப்போ...

36. என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே?

  36. என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே?   பாடியவர்: சீத்தலைச் சாத்தனார் சங்க இலக்கியப் பாடல்களைப் பாடிய புலவர்கள் பட்டியலில், நற்றிணையில் மூன்று பாடல்களை (36, 127, 339) இயற்றியவரின் பெயர் 'சீத்தலைச் சாத்தனார்' என்றும், குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் உள்ள பாடல்களை இயற்றிய புலவரின் பெயர் 'மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்' என்றும் காணப்படுகிறது. சிலர், 'சாத்தனார்' என்ற பெயர் கொண்ட புலவர் இருவரும் ஒருவரே என்றும், வேறு சிலர், இருவரும் வெவ்வேறான புலவர்கள் என்றும் கருதுகின்றனர். இவரே மணிமேகலைக்   காப்பியத்தைப் பாடியவராக இருக்கக்கூடும்.     திணை: குறிஞ்சி   துறை: இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது   துறை விளக்கம்: தலைவன் தலைவியை இரவு நேரத்தில் சந்திக்க வரும் ‘இரவுக்குறி’ நிகழ்வில், அவன் வேலியின் புறத்தே மறைந்து நிற்பதை அறிந்த தோழி, அவனுக்குக் கேட்கும்படி தலைவியிடம் பேசுவதுபோல உரக்கக் கூறி, விரைந்து திருமணம் செய்து கொள்ளுமாறு (வரைவு கடாதல்) வற்புறுத்துகிறாள்.   பாடலின் பின்னணி: இப்பாடல், இரவு நேரத்தில்...