நற்றிணை - கடவுள் வாழ்த்து
கடவுள் வாழ்த்து பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார் இவர் பாரதத்தைத் தமிழில் பாடியதால் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அழைக்கப்பட்டார். இவர் இயற்றிய பாரதம் இப்பொழுது கிடைக்கவில்லை. இவர் இயற்பெயர் பெருந்தேவனார். இவர் எட்டுத்தொகை நூல்களில் அகநானூறு , புறநானூறு , நற்றிணை , குறுந்தொகை மற்றும் ஐங்குறுநூறு ஆகிய ஐந்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து எழுதிச் சேர்த்தவர். மா நிலம் சேவடி ஆக தூநீர் வளை நரல் பௌவம் உடுக்கை ஆக விசும்பு மெய் ஆக திசை கை ஆக பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய 5 வேத முதல்வன் என்ப தீது அற விளங்கிய திகிரியோனே! அருஞ்சொற்பொருள்: 1. மா – பெரிய; சேவடி – சிவந்த அடி; தூ – தூய 2. வளை - சங்கு; நரலுதல் - ஒலித்தல்; பௌவம் - கடல்; உடுக்கை – ஆடை 3. விசும்பு – ஆகாயம்; மெய் - உடல் 4. பசுங்கதிர் – குளிர்ச்சியான கதிர்; மதியம் - திங்கள்; சுடர் – கதிரவன் 5. பயின்று – பொருந்தி 7. தீது – குற்றம்; திகிரி – ஆழி (சக்கராயுதம்) பதவுரை: 1. மா நிலம் சேவடி ஆக தூநீர் - பெரிய ...