25. பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே!
25. பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே! பாடியவர்: பேரிசாத்தனார் இவர் வட வண்ணக்கண் பேரிசாத்தனார் என்றும் குறிக்கப்படுகின்றார். பேரி என்ற சொல்லுக்கு முரசு என்று பொருள். இவரது இயற்பெயர் சாத்தனார். இவர் , ஒருபாடலில் கடலலையின் ஒலிக்கு முரசின் ஒலியை உவமையாகக் கூறியதால் பேரி சாத்தனார் என்று அழைக்கப்பட்டார். தங்கத்தைப் பரிசோதனை செய்பவர்களுக்கு வண்ணக்கர் என்பது தொழிற்பெயர். மற்றும் , இவர் வட நாட்டிலிருந்து தமிழகத்தில் குடியேறியதால் வட என்ற அடைமொழியும் இவர் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது. இவர் வடம வண்ணக்கர் என்றும் குறிக்கப்படுகின்றார். இவர் புறநானூற்றில் இயற்றிய ஒரு செய்யுள் (198) மட்டுமல்லாமல் அகநானூற்றில் 5 செய்யுட்களையும் ( 38, 214, 242, 268, 305), நற்றிணையில் 8 செய்யுட்களையும் ( 25, 37, 67, 104, 199, 299, 323, 378), குறுந்தொகையில் 5 செய்யுட்களையும் ( 81, 159, 278, 314, 366) இயற்றியுள்ளா ர். திணை: குறிஞ்சி ...