16. நல்லதற்கு உரியை, வாழி என் நெஞ்சே!
16. நல்லதற்கு உரியை, வாழி என் நெஞ்சே! பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார் சிறைக்குடி என்னும் ஊரைச் சார்ந்தவராக இருந்ததால் இப்பெயர் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவர் குறுந்தொகையில் எட்டுப் பாடல்கள் (56, 57, 62, 132, 168, 222, 273, 300), நற்றிணையில் ஒரு பாடல் (16) ஆகியவற்றை இயற்றியுள்ளார் திணை: பாலை துறை : பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவு அழுங்கியது. துறை விளக்கம்: செல்வம் ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்ல வேண்டும் என்று தலைவன் எண்ணினான். ஆனால், தலைவியைப் பிரிய மனம் வராததால், தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு செல்லும் முடிவைக் கைவிடுகிறான். பாடலின் பின்னணி: சில மாதங்களுக்கு முன்பு, ஒருநாள் தலைவன் வேட்டையாடச் சென்றபொழுது, தலைவியைச் சந்தித்தான். அன்றுமுதல் இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். களவொழுக்கத்தின் தொடக்கத்தில் அவர்கள் பகலில் சந்தித்தார்கள்; பின்னர், இரவிலும் சந்திக்கத் தொடங்கினார்கள். நாள் தவறாமல் அவளைச் சந்திப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தான். நாளடைவில் அவர்களின் காதல் ஊர்மக்களுக்குத் தெரிய ஆரம்பித்து, அ...