Posts

Showing posts with the label 41. அரிவையின் குறுநடைக் கூட்டம்

41. அரிவையின் குறுநடைக் கூட்டம்

  41. அரிவையின் குறுநடைக் கூட்டம்   பாடியவர்: இளந்தேவனார் இளந்தேவனார் என்பவர் நற்றிணையில் ஒரு பாடலும் (41) மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார் என்ற புலவர் அகநனூற்றில் மூன்று பாடல்களும் (58, 298, 328) இயற்றியதாகக் காணப்படுகிறது. இருவரும் ஒரு காலத்தில் வாழ்ந்ததால், ஒருவர் ‘இளந்தேவனார்’ என்றும் மற்றொருவர் ‘மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்’ என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார். பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை மற்றும் உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் ஆகியோர்   'இளந்தேவனார்' என்பவரும் 'மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்' என்பவரும் ஒருவரே என்று கூறுகின்றனர்.   திணை: பாலை   துறை: பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகளைத் தோழி உலகியல் கூறி வற்புறுத்தியது   துறை விளக்கம்: "ஆண்கள் தங்கள் கடமைக்காகவும் பொருள் ஈட்டுவதற்காகவும் பிரிந்து செல்வது உலக வழக்கம்; அவர் விரைவில் கடமையை முடித்து திரும்பி வந்துவிடுவார்" என்று உலக இயல்பை எடுத்துக்கூறி, தலைவியின் மனதைத் தேற்றுவதற்காகத் தோழி ஆறுதல் கூறுகிற...