Posts

Showing posts with the label 10. கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி!

10. கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி!

  10. கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி! பாடியவர்: பெயர் கிடைக்கவில்லை [1] திணை: பாலை துறை : உடன்போக்கும் தோழி கையடுத்தது   துறை விளக்கம்: தலைவனோடு தலைவி உடன்போகும்போது, தோழி “தலைவியை   என்றும் பாதுகாப்பாயாக!” என்று தலைவனிடம் கூறுகிறாள். பாடலின் பின்னணி: ”தலைவா! இவள் உன் சொற்களை மெய்யென்று நம்பித்தான் உன்னோடு   உடன்போக்குக்குத் துணிந்தாள். கொங்கரை வென்று புகழ்பெற்ற சோழ மன்னனின் படைத்தலைவன் பழையனின் வேல் ஒருபோதும் இலக்கைத் தவறாததுபோல், நீ கூறிய நல்ல சொற்களும் பொய்யாதவையாக இருக்க வேண்டும்.   நிமிர்ந்து நின்ற இவளது இளமையான மார்பகங்கள் பிற்காலத்தில் தளர்ந்துபோனாலும், பொன்னைப் போன்ற இவளது மேனியைத் தொட்டுத் தாழ்ந்து கிடக்கும் நீண்ட கரிய கூந்தல் நரைத்துப் போகும் முதுமைப் பருவம் வந்தாலும், அன்றைக்கும் இவள் மீது உனக்கிருக்கும் காதல் மாறக்கூடாது; இவளை விட்டுப் பிரியக் கூடாது. காலம் இவளது இளமையையும் அழகையும் கவர்ந்துகொண்டாலும், உன் சொல்லை நம்பி உன்னையே தஞ்சமடைந்த இவளைக் கைவிடாமல் காப்பதே உன் கடமை என்பதை மறவாதே.” என்று தோழி தலைவனிடம் தன் வேண்டுகோ...