Posts

Showing posts with the label 43. ஓர் எயில் மன்னன்போல அழிவு வந்தது

43. ஓர் எயில் மன்னன்போல அழிவு வந்தது

  43. ஓர் எயில் மன்னன்போல அழிவு வந்தது     பாடியவர்: எயினந்தையார் இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. இவர்   எயினனுக்குத் தந்தை என்பதால் எயினந்தையார் என்று அழைக்கப்பட்டதாகச் சிலர் கருதுகின்றனர்.   திணை: பாலை   துறை: பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தது   துறை விளக்கம்: தலைவன் பிரிந்து செல்லப் போகிறான் என்பதை அறிந்த தோழி, அவன் செல்லாமல் தடுத்து நிறுத்தியது அல்லது அவன் பயணத்தை ஒத்திவைக்கச் செய்தது .   பாடலின் பின்னணி: பாலை நிலத்து வெயிலில் தவித்துப் பசியால் அலைந்த செந்நாய், ஒரு மானைக் கொன்று தின்றபின் எஞ்சிய இறைச்சியே வழிப்போக்கர்களுக்கு உணவாகும் அளவுக்கு வறட்சியும் ஆபத்தும் நிறைந்த கொடிய பாலைவழியில், தலைவன் பொருள் ஈட்டப் பிரிய எண்ணுகிறான். அதனைத் தோழியிடம் அறிவிக்க, அவளோ தலைவனின் பிரிவுச் செய்தியைக் கேட்டதுமே தலைவி அடைந்த துயரத்தை எடுத்துரைக்கிறாள். பகைவேந்தனின் யானைப் படை மதிலைச் சூழ்ந்து நின்றபோது, அதைக் காக்க எவரும் இன்றி, அஞ்சற்க என்று அபயம் அளித்த துணை மன்னனும் தன்னைக...