Posts

Showing posts with the label 3. வினை முடித்தன்ன இனியோள்

3. வினை முடித்தன்ன இனியோள்

  3. வினை முடித்தன்ன இனியோள் பாடியவர்: இளங்கீரனார் இவரும் எயினந்தை மகனார் இளங்கீரனார் என்பவரும் ஒருவரே என்று சிலர் கூறுவர். அவ்வாறாயின், இவர் அகநானூற்றில் ஒன்பது பாடல்களும் (3, 225, 239, 289, 299, 361, 371, 395, 399) நற்றிணையில் ஆறு பாடல்களும் (3, 62, 113, 269, 308, 346) குறுந்தொகையில் ஒரு பாடலும் (116) இயற்றியுள்ளார்.   துறை: முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.   துறை விளக்கம்: முன்பொருமுறை பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், பிறகு ஊர் திரும்பினான். ஆனால், அவனுடைய மனம் மீண்டும் பொருள் ஈட்டச் செல்ல வேண்டும் என்று நினைக்கிறது. அப்படித் துடிக்கும் தன் மனதைப் பார்த்துத் தலைவன் கூறியது.   பாடலின் பின்னணி: ”முன்பொரு முறை பொருள் தேடச் சென்றபோது, அந்தப் பாலை நிலத்து மாலைப் பொழுதில் தலைவியின் நினைவால் நான் பெரிதும் வருந்தினேன். அவ்வாறு இருக்க,   என் நெஞ்சமே! என்னை ஏன் மீண்டும் பொருள் தேடுவதற்காக என் மனைவியைவிட்டுப் பிரிந்து செல்லத் தூண்டுகிறாய்?” என்று தன் நெஞ்சிடம் த...