13. எழில் நலம் தொலைய அழாதே!
13. எழில் நலம் தொலைய அழாதே! பாடியவர்: கபிலர் இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த திருவாதவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். 'புலன் அழுக்கற்ற அந்தணாளன்' என்று மாறோக்கத்து நப்பசலையார் இவரைப் புகழ்ந்துள்ளார் (புறநானூறு – 126). கபிலர் இயற்றியதாக எட்டுத்தொகை நூல்களில் 234 செய்யுட்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, புறநானூற்றில் 28 செய்யுட்களையும், கலித்தொகையில் இடம்பெறும் குறிஞ்சிக்கலி என்னும் 29 செய்யுட்களையும் இயற்றியுள்ளார். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் இனிமையை எடுத்துரைக்கும் வகையில் இவர் இயற்றிய குறிஞ்சிப்பாட்டு, பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ளது. குறிஞ்சித் திணைப் பாடல்களை இயற்றுவதில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். சங்கப் பாடல்களில் மிகுதியான பாடல்களைப் பாடிய புலவர் இவரேயாவார், மொத்தமுள்ள 2,381 சங்கப் பாடல்களில் , கபிலர் ஒருவரே 235 பாடல்களைப் பாடியுள்ளார். இது மொத்த சங்கப் பாடல்களில் 10 விழுக்காட்டிற்கும் ( 10%) மேலாகும். இவரால் பாடப்பெற்றோர்: அகுதை, இருங்கோவேள், ஓரி, செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ்ச் சேரலிரும்பொறை, நள்ளி, மலையமான் திருமுட...