Posts

Showing posts with the label 24. நன்று செய்தனையே!

24. நன்று செய்தனையே!

  24. நன்று செய்தனையே! பாடியவர்: தெரியவில்லை [1] திணை: பாலை துறை: 1. பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது. 2.   பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தலைவியைத் தோழி உவந்து கூறியது   துறை விளக்கம்: இங்கு குறிப்பிடப்பட்ட இரண்டு துறைகளுள், முதற் துறையே உரைநூல்களில் காணப்படும் துறை. ஆனால், அந்தத் துறையைவிட, இரண்டாவதாகக் கொடுக்கப்பட்டுள்ள துறை பொருத்தமானதாகத் தோன்றுகிறது. தலைவனின் பிரிவை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் தலைவியைப் பொறுத்ததுதானே ஒழிய, அது தோழியோடு தொடர்பு உடையது அன்று. பொதுவாகக் கணவனின் பிரிவை மனைவி ஏற்றுக்கொள்வதற்குத் தயங்குவாள். இப்பாடலில், பொருள் ஈட்டச் செல்வது ஆண்களின் இயல்பு என்று கருதி, தன் கணவன் பொருள் ஈட்டச் செல்வதைத் தலைவி ஏற்றுக்கொள்கிறாள் . தலைவியின் செயலைத் தோழி பாராட்டுவதாக இப்பாடலுக்குப் பொருள்கொள்வது சிறப்பானதாகத் தோன்றுகிறது.   பாடலின் பின்னணி: குடும்ப வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாது என்பதை உணர்ந்த தலைவன் பொருள் ஈட்டச் செல்வதற்கு வெளியூருக்குச் செல்ல முடிவெடுத்தான். தன் முடிவைத் தலைவிக்குத் தெ...