Posts

Showing posts with the label 26. நும்மொடு துணை ஆகிய தவறோ?

26. நும்மொடு துணை ஆகிய தவறோ?

  26. நும்மொடு துணை ஆகிய தவறோ?     பாடியவர்: சாத்தந்தையார் சாத்தந்தையார் என்னும் சொல் சாத்தனின் தந்தை எனப் பொருள்படுமாயினும் சாத்தன் என்பவரைப் பற்றிய குறிப்பொன்றும் காணப்படாததால் சாத்தந்தையார் என்பது இப்புலவரின் இயற்பெயர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.   இவர் சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியிடம் இளமைக் காலத்திலிருந்தே பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர்.   கோப்பெரு நற்கிள்ளி தன் தந்தையை வெறுத்து , ஆமூர் சென்ற பொழுது , இவரும் அவனுடனிருந்து அவன் செயல்களைக் குறித்துள்ளார்.   இப்புலவர் கோப்பெரு நற்கிள்ளியின் மற்போர் ஆற்றலைப் புகழ்ந்து பாடியுள்ளார். இவர் புறநானூற்றில் நான்கு செய்யுட்களும் (80, 81, 82, 87) நற்றிணையில் ஒரு செய்யுளும்(26) இயற்றியுள்ளார்.   திணை: பாலை   துறை: பிரிவுக்குறிப்பு உணர்ந்து தலைவி வேறுபட்டமை சொல்லித் தோழி செலவு அழுங்குவித்தது.   துறை விளக்கம்: தலைவன் பொருளீட்டவோ அல்லது வேறு கடமைக்காகவோ பிரியப் போகிறான் என்பதை அறிந்த தலைவியின் உடலில்/மனதில் ஏற்படும் மாற்றங்களை (வேறுபாட்டை) தலைவனிடம் கூறி, அவன் தன் பயணத்...