Posts

Showing posts with the label 23. கண்ணே காமம் கரப்பு அரியவ்வே!

23. கண்ணே காமம் கரப்பு அரியவ்வே!

  23. கண்ணே காமம் கரப்பு அரியவ்வே!   பாடியவர்: கணக்காயனார் சங்க காலத்தில் கணக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் கணக்காயனார் என்று அழைக்கப்பட்டனர். அதனால், இவர் கணக்காசிரியராக இருந்தவர் என்று தோன்றுகிறது. இவர் மதுரைக் கணக்காயனார் என்றும் அழைக்கப்பட்டார். இவர் சங்க இலக்கியத்தில் பல பாடல்களை இயற்றிய பெரும்புலவர் நக்கீரனாரின் தந்தை. இவர் மூவேந்தர்களாகிய சேர , சோழ , பாண்டிய மன்னர்களைப் பாடியுள்ளார்.   இவர் அகநானூற்றில் மூன்று செய்யுட்களும் ( 27, 338, 342), நற்றிணையில் ஒருசெய்யுளும் ( 23), புறநானூற்றில் ஒருசெய்யுளும் ( 330) இயற்றியுள்ளார்.   திணை: குறிஞ்சி   துறை: தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது   துறை விளக்கம்: காதலனைப் பிரிந்திருக்கும் துன்பத்தைத் தலைவியால் தாங்கிக் கொள்ள முடியவி்ல்லை என்பதைப் புரிந்துகொண்ட தோழி, தலைவனிடம் சென்று 'விரைவில் வந்து அவளைத் திருமணம் செய்துகொள்' என்று வற்புறுத்துவது.   பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் காதலித்து வருகின்றனர். நாட்கள் பல கடந்தும் தலைவன் திருமணம் செய்துகொள்வத...