Posts

Showing posts from October, 2026

100. உள்ளுதொறும் நகுவேன், தோழி!

  100. உள்ளுதொறும் நகுவேன், தோழி!   பாடியவர்: பரணர் சங்க காலப் புலவர்களிலேயே மிகவும் சிறந்த புலவர்களில் ஒருவர் பரணர் .   பரணரால் பாடப்படுவது பாராட்டுதற்குரியது என்ற கருத்தில் “ பரணன் பாடினன் ’ என்று ஒளவையார் குறிப்பிடுகிறார் ( புறநானூறு - 99).   பரணர் , புறநானூற்றில் 13 செய்யுட்களும் , அகநானூற்றில் 34 செய்யுட்களும் , நற்றிணையில் 12 செய்யுட்களும் , குறுந்தொகையில் 16 செய்யுட்களும் , பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தும் பாடியுள்ளார் .   இவரால் பாடப்பட்டோர் உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னி , சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் , சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி , வையாவிக் கோப்பெரும் பேகன் , சேரமான் கடல்பிறக்கோட்டிய வேல்கெழு குட்டுவன் ஆகியோராவர் .   இவருடைய பாடல்கள் வரலாற்றுச் செய்திகள் நிறைந்தவை .   இவர் கபிலரின் நண்பர் .   மருதத் திணைக்குரிய பாடல்கள் இயற்றுவதில் வல்லவர் . இவர் பதிற்றுப்பத்தில் கடல் பிறக்கோட்டிய வேல்குழு குட்டுவனைப் பாடியதற்கு , உம்பற்காட்டு வாரியையும் அவன் மகன் குட்டுவன் சேரனையும் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது . திணை: ...

99. மடவ ஆகலின் மலர்ந்தன!

  99. மடவ ஆகலின் மலர்ந்தன!   பாடியவர்: இளந்திரையனார் இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 94-இன் உரையில் காணலாம். திணை: முல்லை துறை: பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி பருவம் அன்று என்று                         வற்புறுத்தியது   துறை விளக்கம்: தலைவன் பொருள்தேடிப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன், “கார்ப்பருவம் வருவதற்குள் திரும்பி வருவேன்” என்று சொல்லிச் சென்றிருக்கிறான். ஆனால், மழை பெய்வதற்கான அறிகுறிகளையும் மலர்கள் மலர்வதையும் கண்ட தலைவி, “கார்ப்பருவம் வந்துவிட்டது; ஆனால் தலைவன் இன்னும் வரவில்லையே!” என்று வருந்துகிறாள். தலைவியின் துயரத்தை உணர்ந்த தோழி, அவள் காணும் பருவ அறிகுறிகளுக்கு வேறுவிதமான விளக்கம் அளித்து அவளைத் தேற்றுகிறாள். பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றபோது, “கார்ப்பருவம் வருவதற்குள் திரும்பி வருவேன்” என்று உறுதியளித்துச் சென்றான். காலம் செல்லச் செல்ல, வானத்தில் மழை தோன்றுகிறது. மேலும், பிடவம், கொன்றை, கோடல் முதலிய ...

98. என் நார் இல் நெஞ்சே!

  98. என் நார் இல் நெஞ்சே!   பாடியவர்: உக்கிரப் பெருவழுதி இவன் பாண்டிய மன்னர்களில் ஒருவன் . கானப்பேரெயில் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சங்ககாலத்தில் ஆட்சி செய்த வேங்கைமார்பன் என்ற அரசனை வென்றதால், இவன் பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்று அழைக்கப்பட்டான். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் , சேரமான் மாரி வெண்கோவும் இவனுடன் நட்புடையோராக விளங்கினர். இவன் கடைச்சங்கத்தை நிறுவியதாகவும் , அகநானூற்றைத் தொகுப்பித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இவனுடைய அவையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவன் இயற்றியதாக நற்றிணையில் ஒரு பாடலும் (98), அகநானூற்றில் ஒரு பாடலும் (26) சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன . திணை: குறிஞ்சி துறை: இரவுக்குறி வந்து ஒழுகும் தலைவனைத் தோழி வரைவு கடாயது. துறை விளக்கம்: இரவில் தலைவியைச் சந்திக்க வரும் தலைவனைத் தோழி, இனி இரவில் வராமல் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியது. இப்பாடல், தலைவி கூற்றைத் தன் கூற்றாகத் தோழி கொண்டு கூறியது. தலைவி தன் வேட்கையைத் தலைவனிடம் நேரடியாகக் கூறும...

97. உழவர் மகள் கொடியவள்

  97. உழவர் மகள் கொடியவள்   பாடியவர்: மாறன் வழுதி இவருடைய இயற்பெயர் மாறன். வழுதி என்பது இவர் பாண்டிய மன்னர் பரம்பரையைச் சார்ந்தவர் என்பதைக் குறிக்கிறது. இவர் இயற்றியதாக நற்றிணையில் இரண்டு பாடல்களும் (97, 301) குறுந்தொகையில் ஒரு பாடலும் (270) சங்க இலக்கியத்தில் உள்ளன. திணை: முல்லை துறை: பருவம் கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்கு உரைத்தது துறை விளக்கம் : தலைவன் பொருள் தேடுவதற்காகவோ வேறு காரணத்திற்காகவோ தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் குறிப்பிட்ட பருவத்தில் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறான். அந்தப் பருவம் வந்துவிட்டது. ஆனால் தலைவன் இன்னும் திரும்பி வரவில்லை. அதனால், பருவத்தின் வருகையை உணர்த்தும் இயற்கைக் காட்சிகள் ஒவ்வொன்றும் தலைவியின் பிரிவுத் துயரத்தை மேலும் அதிகப்படுத்துகின்றன. அந்தத் துயரத்தைத் தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள். பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் வருவதாகக் கூறிய பருவம் வந்துவிட்டது. முல்லைத் திணைக்கு உரிய இயற்கைக் காட்சிகள் இப்போது தலைவியின் கண்முன் தோன்றுகின்றன. குயில் கூவுகிறது; தெளிந்த நீருடன் ஆறு...