Posts

35. இவள் கண் பசந்ததுவே!

  35. இவள் கண் பசந்ததுவே!   பாடியவர்: அம்மூவனார் இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 4-ன் உரையில் காணலாம்.   திணை: நெய்தல்   துறை: மணமனைப் பிற்றைஞான்று புக்க தோழி நன்கு ஆற்றுவித்தாய் என்ற தலைமகற்குச் சொல்லியது.   துறை விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு வீட்டிற்கு வந்த தோழியிடம், “களவுக் காதல் காலத்தில் நீ தலைவியை நன்றாக ஆறுதல் கூறித் தேற்றினாய்.” என்று தலைவன் கூறியதற்குத் தோழி அளித்த மறுமொழி.   பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும் முதலில் மறைவாகக் களவொழுக்கத்தில் காதலித்து, பின்னர் ஊரறிய மணம் முடித்து இல்வாழ்க்கையைத் தொடங்கினர். அவர்களின் புதிய வாழ்க்கையைக் காண வந்த தோழி, தலைவியின் மேனியில் ஏற்பட்ட மாற்றத்தையும், காதல் இன்பத்தின் மிகுதியால் கண்கள் பசலை நிறம் அடைந்ததையும் கண்டு மகிழ்ந்தாள். அதனைக் கண்ட தலைவன், "முன்பு நாம் மறைவாகக் காதலித்த காலத்தில் நான் பிரிந்திருந்தபோது நீதானே இவளைத் தேற்றி ஆறுதல் கூறினாய்? இப்போது நான் எப்போதும் இவளோடு இருப்பதால் உன் உதவி தேவையில்லை; அதனால்தான் இவள் கண்கள் நிறம்மாறித் தோன்றுகின்றன" என்று தோழியைப் புக...

34. கடவுள் ஆயினும் ஆக மடவை!

  34. கடவுள் ஆயினும் ஆக மடவை!   பாடியவர்: பிரமசாரி இவர் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. இவர் பெயர் பிரமன் காரி என்றும், அந்தப் பெயர் பிரமசாரி என்று தவறாக நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக, ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார்.   திணை: குறிஞ்சி   துறை: தோழி தெய்வத்திற்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது   துறை விளக்கம்: தோழி தெய்வத்திடம் பேசுவதுபோலப் பேசி வெறியாட்டத்தைத் தடுத்தது.   பாடலின் பின்னணி: தலைவன் தலைவியைச் சந்திப்பதற்குக் காலதாமதமாகிறது. அதனால் தலைவி பிரிவுத் துயரால் மெலிவடைகிறாள். இதைக் கண்ட தலைவியின் தாயும் செவிலித்தாயும், "தலைவிக்கு ஏதோ தெய்வக் குற்றம் (முருகனின் அணங்கு) பிடித்துள்ளதோ" என அஞ்சி, வேலனை அழைத்து வெறியாட்டம் நடத்த ஏற்பாடு செய்கின்றனர். தோழி, அங்கு வந்துள்ள வேலனையும், தெய்வமாகிய முருகனையும் பார்த்து, "தலைவனின் மார்பைத் தழுவியதால் வந்த நோய் இதுவென அறிந்தும் வேலன் அழைத்தான் என்பதற்காக இங்கு வந்து நின்றாயே, முருகா, நீ கடவுளாக...

33. மறுத்தல் வல்லுவம் கொல்லோ

  33. மறுத்தல் வல்லுவம் கொல்லோ     பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். அறுவை என்ற சொல்   “ சீலை ,   ஆடை ,   உடை ”   போன்ற பொருள்களைக் குறிக்கும் சொல். இவரது இயற்பெயர் இளவேட்டன்.   இவர் மதுரையில் அறுவை வாணிகத்தில் ஈடுபட்டிருந்ததால் மதுரை அறுவை இளவேட்டனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் ஆறு செய்யுட்களும் ( 56, 124, 230, 254, 272, 302)   குறுந்தொகையில் ஒரு செய்யுளும்( 185)   ,   நற்றிணையில் நான்கு செய்யுட்களும் ( 33, 157, 221, 344),   புறநானூற்றில் ஒருசெய்யுளும் ( 329)   இயற்றியுள்ளார். திணை: பாலை துறை: பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது துறை விளக்கம்: தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து பொருள் ஈட்டப் போகிறான் என்பதைத் தலைவி அறிந்துகொள்கிறாள். அந்தப் பிரிவை எண்ணித் தலைவி அடையும் வேதனையையும், அவளது மனநிலையையும்   உணர்ந்துகொண்ட தோழி, அதைத் தலைவனிடம் சென்று கூறுவது.     பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தன்னைத் பிரிந்து, கதிரவன்...

32. மறுத்தற்கு அரியது

  32. மறுத்தற்கு அரியது   பாடியவர்: கபிலர் இவரைப் பற்றிய குறிப்புகளை முதற் பாடலின் உரையில் காணலாம்.   திணை: குறிஞ்சி   துறை: தலைவிக்குக் குறைநயப்புக் கூறியது   துறை விளக்கம்: தோழி, தலைவனின் காதலையும் அவனது வருத்தத்தையும் தலைவியிடம் சென்று, அவள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நயமாக எடுத்துக் கூறுதல்.   பாடலின் பின்னணி: நீல மேகம் போன்ற நிறமுடைய திருமால்போல் நிமிர்ந்து நிற்கும் மலையில், பால் போன்ற வெண்ணிறமுடைய பலராமனைப்போல் பொங்கி வழியும் அருவிகள் கொஞ்சும் அழகிய நிலப்பகுதிக்குரியவனான தலைவன், பேரன்போடு தலைவியை நினைந்து உருகி வருந்துகிறான் என்று தோழி பலமுறை கூறியும், தலைவி அதனை வெறும் வாய்ச்சொல் என்று எண்ணி, அவன் காதலை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றாள். “பண்புமிக்க பெரியோர்கள் ஒருவரை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே அவருடைய குணநலன்களை நன்கு ஆராய்வர், மாறாக அன்புகொண்டு ஏற்ற பிறகு ஆராய்ந்து விலக்க மாட்டார்கள் என்னும் அறநெறியை உணர்ந்து, நீயே அவனது பேராற்றலையும் தூய காதலையும் உனது கண்களால் நேரில் கண்டு தெளிந்து, உனது உற்றார் உறவினரோடும் கலந்து பேசி, அவனை ...

31. பல நினைந்து யானும் இனையேன்!

  31. பல நினைந்து யானும் இனையேன்!   பாடியவர்: நக்கீரனார் இவர் மதுரைக் கணக்காயனாரின் மகன் என்பதனால் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று அழைக்கப்பட்டார்.   இவரும் மதுரை நக்கீரர் என்பவரும் ஒருவரே என்பது ஒரு சாரர் கருத்து.   வேறு சிலர் , மதுரை நக்கீரர் வேறு இவர் வேறு என்பர்.   இவர் கடைச்சங்கத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது.   இவர் தெளிந்த அறிவும் சிறந்த புலமையும் உடையவர்.   இவர் புறநானூற்றில் மூன்று செய்யுட்களையும் ( 56, 189, 395), அகநானூற்றில் 17 செய்யுட்களையும் , நற்றிணையில் 7 செய்யுட்களையும் , குறுந்தொகையில் 8 செய்யுட்களையும் இயற்றியவர்.   மற்றும் பத்துப்பாட்டில் முதலாவதாகிய திருமுருகாற்றுப்படையையும் ஏழாவதாகிய நெடுநல்வாடையையும் இயற்றியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.   இறையனார் அகப்பொருளுக்கு இவர் எழுதிய உரை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.   திணை: நெய்தல்   துறை: தலைவன் சிறைப்புறத்தானாக தலைவி வன்புறை எதிரழிந்தது.   துறை விளக்கம்: தலைவன் வீட்டின் வெளியே மறைந்து நிற்பதை அறிந்த தோழி, தல...